Advertisment

avadi thirumullaivoyal husband and wife incident

ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல்பகுதியைச்சேர்ந்தவர் பிரவீன்குமார். பொறியாளரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு அபிராமி (வயது 25) என்றமனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. அபிராமியும் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

Advertisment

இந்நிலையில், பிரவீன்குமாரும்அபிராமியும் தங்களது வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் உள்ள கைப்பிடி சுவரின்மீதுஅமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இரண்டாவதுமாடியில் இருந்து அபிராமி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அபிராமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிரவீன்குமார் தனது மனைவி அபிராமியை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அபிராமி இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர்.

அபிராமிக்கும்பிரவீன்குமாருக்கும்திருமணமாகி இரண்டரை ஆண்டுகளேஆவதால் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும்பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்துபெண் இன்ஜினியர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.