avadi labour incident Police investigation

சென்னையை அடுத்துள்ள ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சுத்தம் செய்ய அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ரமேஷ் என்ற தொழிலாளிகள் முயன்றுள்ளனர்.

Advertisment

அப்போது கழிவுநீர் தொட்டியைசுரேஷ் சுத்தம் செய்ய முற்பட்டபோது விஷ வாயு தாக்கி, சுரேஷ் கழவு நீர் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளார். இவரைக் காப்பாற்ற தொட்டியில் இறங்கிய ரமேஷூம் மயங்கியுள்ளார். இதனைக் கண்ட குடியிருப்பு வாசிகள் இது குறித்து ஆவடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தொட்டியில் சிக்கி இருந்த சுரேஷை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சுரேஷ் விஷ வாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ரமேஷ் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மயங்கி விழுந்த மற்றொரு தொழிலாளியான ரமேஷை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.