avadi Jewelry incident Sensation in Chennai

Advertisment

துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சென்னையைஅடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நகைக்கடைக்கு 4 மர்ம நபர்கள் காரில் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைகொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.