தமிழகத்தின் 15 வது மாநகராட்சியாகிறது ஆவடி!!

தமிழகத்தின் 15 வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதியதாக உதயமாகும் ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் வரும்.

avadi

மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். பொதுவாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை போன்றவைகளின் கட்டமைப்புகள் தரம் உயரும் அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள்அதிகரிக்க வாய்ப்புண்டு.

மொத்தம் 148 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாக இந்த புதிய மாநகராட்சி அமைய உள்ளதாகவும், மக்கள் தொகை 6.12 லட்சமாகவும், 80 முதல் 100 வார்டுகள் வருவதற்கான வாய்ப்புகள்இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

avadi Corporation
இதையும் படியுங்கள்
Subscribe