Advertisment

தம்பதிகள் கொலை செய்யப்பட்டது எப்படி...? வெளியானது பிரேதப் பரிசோதனை அறிக்கை!

Autopsy report released in chengalpattu incident

மயிலாப்பூர் தம்பதிகள் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

Advertisment

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்- அனுராதா என்ற வயதான தம்பதி அமெரிக்காவில் படித்து வரும் தமது பிள்ளைகளைச் சந்தித்துவிட்டு, சென்னை திரும்பினர். இருவரையும் அவரது கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், இருவரும் வீட்டிற்கு வராததால் அவர்களை கார் ஓட்டுநர் லால் கிருஷ்ணா கடத்திவிட்டதாக உறவினர்கள் காவல்துறையில், புகார் அளித்தனர்.

Advertisment

விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், கிருஷ்ணா நேபாளத்துக்கு தப்பிச் சென்று கொண்டிருப்பதை அறிந்தனர். அவர் ஆந்திராசென்றுக் கொண்டிருந்த போது, தமிழக காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில் அவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்து ஒப்படைத்தனர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்திய போது, இருவரையும் பணத்திற்காக கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்துவிட்டதாக ஓட்டுநர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கார் ஓட்டுநர் லால் கிருஷ்ணா, அவரது நண்பர் ரவி ராய் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் தம்பதியினரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து செங்கல்பட்டு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி இருந்த நிலையில் இந்த சம்பவத்தில் தம்பதிகள் இருவரும் கிரிக்கெட் மட்டையால் பலமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Chengalpattu incident police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe