Automatic Body Heat Testing Equipment! Superintendent of Police, Cuddalore Launched!

Advertisment

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தானியங்கி உடல் வெப்ப பரிசோதனைக் கருவி நிறுவப்பட்டுள்ளது. இக்கருவி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் இணைய வழி பரிமாற்றம் (Artificial intelligence and internet of things )மூலம் செயல்படுகிறது.

மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க வரும் பார்வையாளர்கள் இக்கருவியின் முன்னாள் நிற்கும்போது தானியங்கி மூலம் உடல் வெப்ப நிலையை காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 37.2 டிகிரி செல்சியஸ் டிகிரிக்கு மேல் உடல் வெப்பம் உள்ளவர்கள் நிற்கும்போது, இக்கருவியில ஒரு எச்சரிக்கை ஒலி ஒலிக்கும். மேலும் அவர்களின் புகைப்படம் தானாக படம் பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும். அதன்மூலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலக பணியாளர்கள்மற்றும் பார்வையாளர்கள் யாருக்காவது வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கடந்த சில நாட்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் தொற்றுள்ளவர்களைகண்காணிக்க இக்கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸ்ரீஅபிநவ் வழிகாட்டுதலின்படி, காவல் தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் ரவிக்குமார் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.