சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில், "ஊரடங்கு நேரத்தில் தமிழக அரசு ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், ஆட்டோவில் சமூக இடைவெளியுடன் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்து, நிர்வாகிகள் மோகன்தாஸ், செந்தில், சம்சுதின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு தமிழக அரசிடம் நிவாரணம் கேட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.