Auto overturned without knowing the rainwater ditch; Warning to motorists

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. சென்னையிலும் பரவலாக மழை பொழிந்து வருவதால், பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள நீரை வடிக்க ஊழியர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், சென்னை மேடவாக்கத்தில் தேங்கி நின்ற மழைநீர் வெள்ளத்தில் மூன்று சக்கர ஆட்டோ கவிழ்ந்து விழுந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மேடவாக்கம் விஜிபி பாபு நகர் முதல் பிரதான சாலையில், நேற்று பெய்த மழையின் காரணமாக மழை நீர் தேங்கி நின்றது. இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் அந்த சாலையில் எந்த பகுதியில் பள்ளம் இருக்கிறது என்று தெரியாத அளவிற்கு இருந்தது. இதனால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்லும் சிலர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், பூண்டு வியாபாரி ஒருவர் மூன்று சக்கர ஆட்டோ வாகனத்தில், விற்பனைக்காக பூண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த போது,திடீரென பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த காட்சிகள் அந்த பகுதியிலிருந்தசிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.