Advertisment

ஆற்றில் கவிழ்ந்த ஆட்டோ; பெண் ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேர் போராடி மீட்பு

Auto overturned in river; Four people, including the female driver, were rescued after a struggle

Advertisment

கன்னியாகுமரியில் பெண் ஆட்டோ ஓட்டுநர் இயக்கிய ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச்சேர்ந்தவர் செந்தில்குமாரி.இவர் சொந்தமாக ஆட்டோ ஒன்றை ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் பொருட்கள் வாங்குவதற்காக நண்பர்களை ஏற்றிக்கொண்டு செந்தில்குமாரி ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது நாகர்கோவில் பகுதியில் உள்ள இடலாக்குடி, ஆணைபாலம் என்ற பகுதியில் ஆட்டோ பிரேக் பிடிக்காததால் திடீரென நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.15 அடி ஆழம் கொண்ட ஆற்றில் ஆட்டோ மூழ்கியது. உயிருக்குப்போராடிய பெண் ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமாரி உட்பட நான்கு பேரையும் அக்கம் பக்கத்தினர் போராடி மீட்டனர்.

நால்வரும் சிறு காயங்களுடன் தன்வாய்ப்பாக உயிர்த் தப்பினர். தொடர்ந்து நீரில் மூழ்கியஆட்டோவும் கயிறு கட்டி அந்தப் பகுதி மக்களால் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்குத்தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றுக்குள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

incident Kanyakumari nagerkovil Women
இதையும் படியுங்கள்
Subscribe