
தாம்பரம் அருகே சாலை தடுப்பில் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் சிக்னல் பகுதியில் உள்ள சாலை தடுப்பில் திடீரென ஆட்டோ ஒன்று மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னால் சென்ற பேருந்தின் மீது மோதாமல் இருப்பதற்காகஆட்டோவை திருப்பியபோது சாலை தடுப்பில் பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கடலூரைச் சேர்ந்த இசக்ராஜ், உத்திரமேரூரைச் சேர்ந்த சுந்தரராஜன், புதுச்சேரியைச் சேர்ந்த நாகமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த கட்டட தொழிலாளர்கள் ஏழுமலை, ஆனந்தகுமார் உள்ளிட்ட 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஆட்டோவை வேகமாக ஓட்டி 3 பேர் இறப்புக்கு காரணமான ஆட்டோ ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)