Advertisment

மனைவி, மகன்களைக் கொன்று ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு!

Auto driver's tragic decision to incident his wife and sons!

Advertisment

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவன் (38). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வரும் இவருக்கு நந்தினி (28) என்ற மனைவியும், அபினேஷ் (6), தர்ஷன் (5), என்ற 2 மகன்களும் இருந்தனர். இதற்கிடையில், கணவன் மனைவி இடைடே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை சிவனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், சிவனின் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அதில், நந்தினியும், அவரது இரண்டு மகன்களும் இறந்த நிலையிலும், சிவன் மயக்க நிலையிலும் இருந்ததைக் கண்டுஅதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவனின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதனையடுத்து, மயக்க நிலையில் கிடந்த சிவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இறந்து போன மற்ற 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் முதற்கட்டமாக மனைவி மற்றும் மகன்களை கொன்று சிவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி, மகன்களை கொன்றுஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

incident dharmapuri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe