Advertisment
தமிழக அரசு நலவாரியம் மூலம், கட்டுமான நலவாரிய உறுப்பினர்களுக்குப் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேபோன்று ஆட்டோ நலவாரியம் வாயிலாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் சிறப்பு தொகுப்பை வழங்க வேண்டுமென சென்னை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுனர்கள் பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு. தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.