Auto Driver passes away near nagapattinam.. police arrested three

Advertisment

நாகையில் மது அருந்தும்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் முகத்தை சிதைத்து கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நாகை மருந்து கொத்தளதெருவைச் சேர்ந்த முத்தயா என்பவரின் மகன் பிரகாஷ். சொந்தமாக ஆட்டோவைத்து ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். பிரகாஷ்க்கு தினமும் தனது நண்பர்களோடு மது அருந்துவது வழக்கம். இந்த நிலமையில் நேற்று இரவு அவரது அம்மா வீட்டில் இல்லாததை சாதகமாக்கிக்கொண்ட பிரகாஷ் வீட்டிலேயே நண்பர்களோடு மது அருந்தியிருக்கிறார்.

போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருந்த நண்பர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு, நொடிபொழுதில் பிரகாஷ் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த பிரகாஷை அப்படியே போட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

Advertisment

வெளியில் சென்று வீட்டிற்கு வந்த பிரகாஷின் தாயார், பிரகாஷ் ரத்தவெள்ளத்தில் சரிந்தநிலையில் உயிரிழந்து கிடப்பதை பார்ந்து நிலைகுலைந்து கத்தியிருக்கிறார். பிறகு நாகை நகர போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட பிரகாஷ் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவா, சத்தியசீலன், ஆனந்த் ஆகிய மூவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர் வீட்டிலேயே வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.