மனவேதனை... ஆட்டோ ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு

Auto driver lost their life

ஈரோடு, வீரப்பன்சத்திரம், ஜான்சி நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் சீனிவாசன் (23). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் உடல்நிலை சரியாகாததால் சீனிவாசன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூங்கொடி தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். நேற்று காலையில் அவர் வீட்டுக்கு வந்தபோது, வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.அவர் வெகு நேரம் கதவைத் தட்டியும், சீனிவாசன் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பூங்கொடி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கெனவே சீனிவாசன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Erode police
இதையும் படியுங்கள்
Subscribe