Advertisment

ஆட்டோ டிரைவர் மர்ம நபர்களால் குத்திக்கொலை!

AUTO DRIVER INCIDENT POLICE INVESTIGATION

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு (வயது 38). இவர் நேற்று (27/11/2021) நள்ளிரவு ஆலத்துடையான்பட்டியில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, மர்மநபர் செல்போனில் தொடர்புக் கொண்டு அழைத்துள்ளார்.

அழைத்தது யார் என்று பார்ப்பதற்காக வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார் பிரபு. அப்போது எம்ஜிஆர் நகர் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். வெளியே சென்ற கணவன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி உஷா கணவரைத் தேடிச் சென்றுள்ளார்.

AUTO DRIVER INCIDENT POLICE INVESTIGATION

Advertisment

அப்போது கணவர் பிரபு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இச்சம்பவம் குறித்து உறவினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரான பிரபுவுக்கு ஏற்கனவே முன் விரோதம் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Police investigation incident trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe