கோவையில் ஆட்டோ ஓட்டுனர் சரமாரியாக பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் அதேபோல் கட்டிட வேலைக்கும்சென்று வருவதாக கூறப்படுகிறது. இவர் இன்று சரவணம்பட்டியில் இருந்து கோவில்பாளையத்திற்கு வாடகைக்குபயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில்சென்றுள்ளார். அங்கு கோவில்பாளையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு வரும் வழியில் ஆட்டோவின் பின்னே இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவருக்கும் அருண்பிரசாத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

Advertisment

kk

ஆட்டோவில் வழி விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையானது வாக்குவாதமாகமுற்றியதையடுத்து அருண்பிரசாத்தை ஆட்டோவை நிறுத்த அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால் அருண்பிரசாத் நிற்காமல் சென்றதால்ஆட்டோவை வழிமறித்து நிறுத்திய அவர்கள்எந்தவித பேச்சு பேச்சுவார்த்தையும்நடத்தாமல் சரமாரியாக தாக்கினர்.

அருகில் கட்டிடம் ஒன்றின் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த நிலையில் கட்டிடப் பணிகளுக்காக சிமெண்ட் கலவையை கலக்க வைக்கப்பட்டிருந்த கரண்டியை எடுத்து சரமாரியாக நெஞ்சிலும் தலையிலும் வெட்டினர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள அன்னூர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சாலையில் இருந்த பேக்கரி ஒன்றில் மக்கள் இருந்தும் யாரும் இந்த சண்டையை தடுக்க வில்லை.

Advertisment

kk

இந்நிலையில் சரமாரியாக வெட்டுக்காயம்பட்ட அருண்பிரசாத்தை பேக்கரியில் அமர வைத்தனர். ஆனாலும் அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தப்பிச்சென்ற நிலையில்இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.