
நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களைத்தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடம் ஐயப்பன் தெரு சந்திப்பு பகுதியில்,இளைஞர்கள் சிலர் இரவு நேரத்தில் நடு ரோட்டில்கேக் வெட்டி பிறந்தநாள்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் காமேஷ் வழி விடுமாறு அந்த இளைஞர்களை எச்சரித்துள்ளார். இதனால் போதையிலிருந்த இளைஞர்கள் கும்பல் காமேஷுடன் தகராற்றில் ஈடுபட்டனர். உடனடியாக காமேஷ் அவருடைய சகோதரர் சதீஷை வரச் சொல்லி இருக்கிறார். இருவரும் இளைஞர்களிடம் நியாயம் கேட்டபொழுது ஆத்திரமடைந்தவர்கள் கத்தியால் தாக்கி காமேஷை கொலை செய்தனர். சகோதரர் சதீஷ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அம்பத்தூர் போலீசாருக்கு இதுதொடர்பாகத்தகவல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தபோலீசார் 9 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)