Advertisment

தடுப்புச்சுவர் உடைந்து விழுந்ததில் சேதமடைந்த ஆட்டோ!

Auto damaged in the fall of the wall

Advertisment

திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள பெரிய மிளகுபாறைப் பகுதியில் கி.ஆ.பெ. விசுவநாதன் மருத்துவக் கல்லூரியின் வளாக தடுப்புச்சுவர் எதிர்பாராதவிதமாக உடைந்து விழுந்தது. திருச்சியில் நேற்று (01.07.2021) இரவு பெய்த கனமழையின் காரணமாக மருத்துவக் கல்லூரியின் தடுப்புச் சுவர் அதிக அளவில் ஈரப்பதத்துடன் இருந்த நிலையில், இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, தடுப்புச் சுவர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சஞ்சீவி என்பவரின் ஆட்டோவின்மீது சுவர் இடிந்து விழுந்ததால் ஆட்டோ முழுமையாக சேதமடைந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மருத்துவக் கல்லூரியின் தலைவர் வனிதா உடனடியாக சுவரை சரி செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர்ச்சியாக உள்ள தடுப்புச் சுவர்கள் உடைந்து விழுவதற்கு தயார் நிலையில் உள்ளதால், தடுப்புச் சுவர்கள் முழுவதையும் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

auto damaged trichy
இதையும் படியுங்கள்
Subscribe