ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும், பயணிகள் ஆட்டோவும் மோதிக் கொண்டதில் ஆட்டோ நொறுங்கியதில் ஆட்டோவில்பயணித்த இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து வளைவில் திரும்பும்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த இருவர் காயம் அடைந்தனர். சித்தார்கோட்டை வழியாக அரண்மனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து வளைவில் திரும்பிய போது ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இதில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய ஆட்டோ முழுவதுமாக சேதமடைந்தது. அதேநேரம் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் மின்கம்பமும் சேதமடைந்தது. உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.