/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/auto_8.jpg)
சென்னை பெரம்பூரில் இரவு 12 மணிக்கு கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஒரு வழிப்பாதையில் வந்ததாக கூறி 1500 அபராதம் விதித்து போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை, சில தினங்கள் முன்பு நோ என்ட்ரி மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை அதிகரித்து உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை பெரம்பூரில் கர்ப்பிணியை ஏற்றிவந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இரவு 12 மணி ஆனதாலும் வழிகளில் ஏதும் தகவல் பலகைகளை கவனிக்காததாலும் விரைவாக செல்லும் பொருட்டு ஒரு வழிப் பாதையில் வந்துள்ளார். அங்கு இருந்த போக்குவரத்து காவல் துறையினர் அந்த வண்டியை நிறுத்தி1500 ரூபாய்அபராதம் விதிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
இது குறித்து வெளியானஅந்த வீடியோ பதிவில், "மணி 12 ஆகுது. ஒரு ஆட்டோவுலநான் எமெர்ஜென்சின்னுவரேன். நீங்க 1500 குடுங்கன்னா எப்படி. மாசமான பொண்ணு உள்ள இருக்கு குழந்தைய வேற வச்சிருக்கு. நோ என்ட்ரி போர்டு நீங்க போட்டு இருக்கிங்களா...?" என ஆட்டோ ஓட்டுநர் பேசிய அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)