Advertisment

ஆட்டிசம் உள்ள குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!

autism

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தையைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே நெய்குப்பி பகுதியில் கோடீஸ்வரி என்பவரின் இரண்டு வயது குழந்தை ஹரிஹரசுதன் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆட்டிசம் குறைபாட்டால் குழந்தை பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியதால் தாய் கோடிஸ்வரி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடும் மன உளைச்சலிலிருந்த கோடீஸ்வரி, தனது ஆட்டிசம் பாதித்த குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றுவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

நேற்றுதான்எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோருக்குப் பயிற்சியும் ஆலோசனையும் அவசியம் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

child autism
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe