ADVERTISEMENT

‘அரசால் தடைசெய்யப்பட்ட என்ஜினை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும்’ - மீனவர்கள் எச்சரிக்கை 

09:00 AM Oct 20, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசால் தடை செய்யப்பட்ட ஸ்பீட் என்ஜினைப் பயன்படுத்தி நாகை ஃபைபர் படகு மீனவர்களின் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகளை சேதப்படுத்தி, மோதலில் ஈடுபட்டு வன்முறைக்கு வித்திடும் பூம்புகார் மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மீனவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

பூம்புகார் மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட ஸ்பீட் என்ஜினைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதோடு, நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட சாதாரண மீனவர்களின் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகளையும் சேதப்படுத்தி மோதலில் ஈடுபட்டுவருவதாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாகையில் இருந்து 2 கிலோ மீட்டர் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களை நடுக்கடலில் சூழ்ந்து வலைகளை சேதப்படுத்திய பூம்புகார் மீனவர்கள் ரகளையிலும் ஈடுபட்டனர். இந்தக் காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில் நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், ‘தடை செய்யப்பட்ட ஸ்பீட் என்ஜின் பயன்படுத்தும் மீனவர்களை அரசு தடை செய்யாததைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், மோதலில் ஈடுபட்ட பூம்புகார் மீனவர்களின் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும்’ என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT