Auspicious musicians corona relief issue - Highcourt order

Advertisment

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மங்கல இசைக் கலைஞர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக்கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைதடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டு, கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால்,தங்களுக்கு வாழ்வாதாரம் பறிபோயுள்ளதால் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை அறக்கட்டளை நிறுவன தலைவர் குகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி வழங்கப்படவில்லை என்றும், தங்கள் அமைப்பினருக்கு நிதியுதவி வழங்கக்கோரி அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு, மங்கல இசைக் கலைஞர்களை, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான நலவாரியத்தில் பதிவு செய்து அவர்களுக்கும் நிதி உதவி வழங்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு மே 29-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.