On August 27, Chief Minister M.K. Stalin's trip to America!

Advertisment

தமிழக அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரம்180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் முன்னணி நிறுவனத் தலைவர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மேலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.