On August 13, the AIADMK Meeting of legislators!

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (11/08/2021) கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருப்பதையொட்டி, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 13- ஆம் தேதி அன்று மாலை 04.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

Advertisment

இக்கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், இன்ன பிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Advertisment

ஆகஸ்ட் 13- ஆம் தேதி அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.