Published on 19/08/2021 | Edited on 19/08/2021

தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண்ணைப் பதிவிட்டு மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கரோனா காரணமாக, இந்த ஆண்டு 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.