Advertisment

கழிவறை டெண்டர் விவகாரம்; ஆடிட்டர் சரமாரியாக வெட்டிக்கொலை 

thanjavur

Advertisment

தஞ்சையில் மாநகராட்சி கழிவறையை டெண்டர் எடுக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் ஆடிட்டர் ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் கரந்தை சேர்வைக்காரன் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். மகேஸ்வரனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் மாநகராட்சி கழிவறையை டெண்டர் எடுப்பதில் போட்டி இருந்துள்ளது. இந்த நிலையில், மர்ம கும்பல் ஒன்று மகேஸ்வரன் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மேற்கு காவல்நிலைய போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய இட்லி கார்த்திக் உள்ளிட்ட நால்வரை போலீசார் தேடிவருகின்றனர்.

Thanjavur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe