style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ட்விட்டரில் நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டிருந்ததால் டெல்லி உயர்நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
டெல்லி உயர்நீதிமன்றத்தில்ப.சிதம்பரத்தின் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி முரளிதர் விசாரிக்கிறார். இதுதொடர்பாகதான் குருமூர்த்தி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் நீதிபதி முரளிதர் ப.சிதம்பரத்திடம் ஜூனியராக பணிபுரிந்தவர் எனக்கூறி அவரது பணிக்கு உள்நோக்கம் கற்பிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். இது பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து குருமூர்த்தி மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை தொடரும் எனக்கூறியிருந்தது. இந்நிலையில் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">