Audio of teacher Mithun Chakraverty's wife and student talking! Police decide to investigate!

கோவையில் பாலியல் தொல்லையால் உயிரிழந்த மாணவியுடன், அவரது இறப்புக்கு முன்னதாக ஆசிரியரின் மனைவி பேசிய ஆடியோ பதிவு தற்போது பரவிவருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Advertisment

கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி, தனியார் பள்ளி ஆசிரியர் அளித்தப் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவியும் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில், மிதுன் சக்ரவர்த்தியின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து அறிந்த அவர், மாணவியிடம் பேசிய ஆடியோ பதிவு தற்போது வைரலாகப் பரவிவருகிறது. அதில் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி, “மிதுன் சக்ரவர்த்திக்கு ஏன் தொடா்ந்து குறுஞ்செய்தி அனுப்பினாய்? உன் பெற்றோரை அழைத்துக்கொண்டு வா, பள்ளி முதல்வரிடம் இதுகுறித்து பேசுவோம். எல்லா விவரங்களையும் உனது பெற்றோரிடம் கூறிவிட்டாயா” என பல கேள்விகளைக் கேட்கிறார். இதில் உயிரிழந்த மாணவி, தான் பாலியல் ரீதியாக மிதுன் சக்ரவர்த்தியால் துன்புறுத்தப்பட்டது குறித்து தெரிவித்து அழுகிறார். இந்த ஆடியோ கடந்த சில நாட்களாக வைரலாகப் பரவிவருகிறது.

பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள இந்த வழக்கில்பல கோணங்களில் விசாரித்துவரும் போலீசார், இந்த ஆடியோ விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆடியோ குறித்து மிதுன் சக்ரவர்த்தியின் மனைவியிடம் விசாரிக்க உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.