Published on 21/07/2021 | Edited on 21/07/2021

திருச்சி மாவட்டம், அல்லித்துறைப் பகுதியில் பிரபல ரவுடி கொட்டப்பட்டு ஜெயக்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கடந்த ஆண்டு வழிப்பறி வழக்கில் சுந்தர்ராஜ் என்பவரை மிரட்டிய புகாரில் ரவுடி ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரவுடி ஜெயக்குமார் மீது நீதிமன்றத்தில் 10 வழக்குகளும், காவல் நிலையங்களில் 20 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
ரவுடிகள் பட்டியல், என்கவுண்டர் பற்றி பாலசுப்பிரமணியன் பேசிய ஆடியோ வெளியான நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பாலசுப்பிரமணியனுடன் பேசிய வழக்கறிஞர் கார்த்தியையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.