Advertisment

ரவுடிகள் பேசும் ஆடியோ... அதிர்ச்சியில் அதிகாரிகள்... 

ddd

Advertisment

திருச்சி மாநகருக்குள் 2 ரவுடிகள் பேசிய செல்ஃபோன் ஆடியோ தற்போது மாநகர் முழுவதும் தொடர்ந்து பலரால் கேட்கப்பட்டுவருகிறது.இருவரும் தங்களுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டது தற்போது அதிகாரிகள் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்பட்டுவருகிறது.

அதில், ஒரு முனையில் ராம்ஜிநகர் மதன் என்ற ரவுடியும் மறுமுனையில் பேசிய தினேஷ் என்ற ரவுடியின் சகோதரர் திலிப்பும் அவர்களுக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகளை சரி செய்வதற்காக முயற்சி செய்த நிகழ்வுகளைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

மசாஜ் சென்டர்கள் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வது குறித்தும், கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வது தொடர்பாகவும், கொலை செய்வது குறித்த திட்டங்களும் இந்த ஆடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக ஆறுமாத காலத்திற்குப் பிறகு செய்யப்போகும் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது இன்னும் பலருக்கு அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மேலும், இவர்கள் பேசிய இந்த ஆடியோவில் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமான ரவுடிகளின் பெயர்களையும் தங்களுடைய குருக்களின் பெயர்களையும் அவர்கள் சர்வ சாதாரணமாக தொடங்கியது அதிகாரிகள் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அந்த ஆடியோ உரையாடலில் பதிவிடப்பட்ட பெயர்கள் சின்ன மஹாராஜாகமல், தினேஷ் காட்டூர் கார்த்தி, தீபக்,செல்வகுமார் மோகன்ராவ், துரை, அட்டாக் பாண்டி, கமல் மாமா என ஒருபக்கம் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

மற்றொரு பக்கம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக 10 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சாமி, ரவி அண்ணன் பிரச்சனை என அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் உரையாடல் நீடிக்கிறது.

பாண்டி, ஜி அண்ணன் மதுரையில் இருக்கிறார்.ஸ்ரீரங்கம் சுதன், டோல்கேட் பிரவீன், மறைந்துபோன அண்ணன் ரவி சுந்தரபாண்டியன், துரை, மோகன்ராவ் அண்ணன் என்று பல ரவுடிகளின் பெயர்கள் நீடித்துக்கொண்டே போகிறது.தங்களுக்கு எல்லா ஊர்களிலும் குறிப்பாக காவல்துறையிலும் பலர் தங்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று தங்களுடைய உரையாடலில் தொடர்ந்து பல ரவுடிகளின் பெயர்களையும் அவர்களின் சம்பவங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்ட இந்த உரையாடல் தற்போது திருச்சியில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

rowdy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe