Advertisment

"நிறைய பாத்தாச்சி... தொண்டர்களுக்கு பாதிப்பென்றால்.." - வெளியான சசியின் 42வது ஆடியோ!

hjk

Advertisment

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா,தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த எந்த விஷயமும் அதிமுகவில் நடைபெறாத காரணத்தால், கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொண்டர்களிடம் சசிகலா தொலைபேசி வாயிலாக பேசிவருகிறார். கடந்த இரண்டு வாரத்தில் இதுவரை 41 ஆடியோ பேச்சுக்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது 42வது ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், "1987 ஆண்டிலேயே இதைப் போன்ற நிறைய சம்பவங்களை நாங்கள் பார்த்துவிட்டோம். அப்போதும் தொண்டர்கள் எங்கள் பக்கம் தொடர்ந்து இருந்துவந்தார்கள். இது எனக்கு ஒன்றும் புதிது கிடையாது. இரண்டாவது முறையாக தற்போது இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகிறது. என் முதுகில் ஏற்கனவே குத்திவிட்டார்கள். இனி குத்துவதற்கு கூட முதுகில் இடம் இல்லை. அதை நான் தாங்கிக்கொண்டேன். ஆனால் தற்போது தொண்டர்களைக் காயப்படுத்துவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். விரைவில் இதற்கு முடிவு வரும்" என்று தெரிவித்துள்ளார்.

VK Sasikala
இதையும் படியுங்கள்
Subscribe