காரைக்காலில் போலி நகை விற்பனை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி 20 லட்சம் ரூபாய்க்கு போலி தங்க நகை செய்யச்சொல்லி கூட்டாளியுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகம் மற்றும் காரைக்காலில் தங்க முலாம் பூசிய செம்பு கம்பிகளால் ஆன போலி நகைகளை உருவாக்கி, வங்கிகள் மற்றும்அடகு கடைகளில் அடகு வைத்தும்விற்பனை செய்தும் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் புதுச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம்உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவான பெண் தொழிலதிபர் புவனேஸ்வரியை ஆந்திரமாநிலம் காக்கிநாடாவில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து காரைக்கால் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் போலி நகை மோசடி வழக்கில் கைதான புவனேஸ்வரியும்அவரது கூட்டாளியான ரிபாத் காமிலும் போலி நகை பரிவர்த்தனை தொடர்பாக பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 14 நிமிடங்கள்ஓடும் அந்த ஆடியோவில் புவனேஸ்வரி கோயம்புத்தூரில் இருக்கும் ஒருவரிடம்இருபது லட்ச ரூபாய்க்குபோலி தங்க நகை செய்யச் சொல்லி ஆர்டர் கொடுக்கச் சொல்கிறார். மேலும், சிதம்பரத்தில் உள்ள ஒருவரிடம் போலி நகைக்கு தேவையான செம்பு கம்பிகளைத்தயாரித்து இரண்டு நாட்களில் நகை ரெடி பண்ணுவதற்கு வேண்டும் என்கிறார். அனைத்திற்கும் உடனடியாக பணம் தருவதாகவும் புவனேஸ்வரி மற்றும்அவரது கூட்டாளி ரிபாத் காமில் ஆகிய இருவரும் ஆடியோவில் பேசியுள்ளனர். மோசடி கும்பலுக்கு புவனேஸ்வரிபாஸாக செயல்பட்டதும் அந்த ஆடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆடியோ தற்போது காரைக்காலில் பரபரப்பு ஏற்படுத்தி aவருகிறது.