Advertisment

ஆடியோ ஆதாரம் இருக்கிறது... நீதிமன்றத்தில் நடிகர் சூரி தகவல்! 

Audio evidence regarding land issue... Actor Suri informed in court!

தன்னிடம்நில மோசடி செய்ததற்கான ஆடியோ ஆதாரம் உள்ளதாக நடிகர்சூரி, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

நகைச்சுவை நடிகர்சூரி, "தன்னிடம்நிலம் வாங்கித் தருவதாக திரைப்படத்தயாரிப்பாளர் அன்புவேல்ராஜா மற்றும் நடிகர் விஷ்ணுவிஷாலின்தந்தையான ஓய்வு பெற்றடி.ஜி.பிரமேஷ்குடவாலாஆகியோர் 2.70 கோடியைவாங்கி ஏமாற்றியதாக அடையாறுகாவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்த வழக்கானது, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில்,இந்த வழக்கினைசி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் எனநடிகர்சூரிதரப்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

Advertisment

இந்த வழக்கில்விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,ஓய்வு பெற்றடி.ஜி.பிகுடவாலாமீதான புகாருக்கு, தங்களிடம் ஆடியோ ஆதாரம் உள்ளது என, சூரிதரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து,நடிகர்சூரிதன்வசம் உள்ள ஆடியோஆதாரத்தை காவல்துறையிடம் ஒப்படைக்க, சென்னைஉயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு, நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

lands actor soori highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe