Audi Krithika- Darshan canceled in major temples!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று (02.08.2021) ஆடி கிருத்திகை என்பதால் கோவில்களில் மக்கள் குவிவதைத் தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கானதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லையில் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் வடபழனிகந்தக்கோட்டம் முருகன் கோயில், பாடி, மயிலாப்பூர் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருத்தணி முருகன் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருச்சி மாவட்டம், ஸ்ரீ ரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல், சமயபுரம் ஆகிய ஐந்து கோயில்களில் அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளது.

Advertisment

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை ஆடிப்பெருக்கு காரணமாக நீர்நிலைகளில் மக்கள் குவிவதைத் தடுக்க, புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.