Advertisment

அதிக வாக்கு வாங்கிக் கொடுத்தால் ஆடி கார் பரிசு! மாஜி மந்திரிக்கு அதிமுக வழக்கறிஞர் அறிவிப்பு

audi car  prize for ex-minister if he gets more votes for AIADMK

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளரும், மாநில அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 50 ஆவது பிறந்த நாளில் அதிரடி பரிசாக அவர் பொறுப்பில் உள்ள 4 நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுக் கொடுத்தால் அவருக்கு ஆடி கார் பரிசளிப்பதாக அதிமுக வழக்கறிஞர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்மன்றத் தொகுதிகளும் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரிந்து கிடக்கிறது. இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவைவிட அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்தால், அவருக்கு வேட்பாளர் சார்பில் இன்னோவா கார், புதுக்கோட்டை நகரத்தில் அதிக வாக்கு வாங்கித் தரும் வட்டச் செயலாளர்களுக்கு தலா 5 பவுன் தங்கச்சங்கிலி பரிசளிப்பதாக அறிவித்தார். இந்த நிலையில், இன்று மாஜி அமைச்சர்விஜயபாஸ்கரின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டுமாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

Advertisment

இதே போல தடாகத்தில் 81 அடி உயரத்தில் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் சிவன் சிலை கொண்ட கீரமங்கலம் மெய்நின்றநாதர் ஆலயத்தில் அதிமுக வழக்கறிஞர் நெய்வத்தளி நெவளிநாதன் சிறப்பு வழிபாடு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது, இன்று அதிமுக அமைப்புச் செயலாளர், வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பிறந்த நாள். அவரது பிறந்த நாளில் மெய்நின்றநாதர் ஆலயத்தில் இருந்து அவருக்கு ஒரு பரிசு அறிவிப்பதில்மகிழ்ச்சியடைகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிக்கும் பொறுப்பில் உள்ளார். அதாவது 4 நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் பெற வைத்தால் "ஆடி" கார் பரிசாக வழங்குகிறேன் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தொகுதியில் அதிக ஓட்டு வாங்கினால் இன்னோவா கார், தங்கச்சங்கிலி பரிசு பரிசு அறிவித்தார் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்.அதே அதிமுகவில் 6 தொகுதியில் அதிக வாக்கு வாங்கிக் கொடுத்தால் மாஜிக்கு ஆடி கார் என்றஅதிமுக வழக்கறிஞரின் அறிவிப்பு. சபாஸ் சரியான போட்டி என்கிறார்கள் ர.ர க்களே!

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe