Advertisment

“மாணவர்களின் கவனத்திற்கு” - அரசு போக்குவரத்துக்கழகம் முக்கிய அறிவுறுத்தல்!

“Attention Students” - State Transport Corporation Important Instruction!

Advertisment

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதாவது வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து பள்ளிகள் ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024 ஜுன் 10 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் 2023-24 கல்வியாண்டில் வழங்கப்பட்ட பயண அட்டை மற்றும் பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்.

“Attention Students” - State Transport Corporation Important Instruction!

Advertisment

அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ - மாணவியர்கள் 2023-24 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

பள்ளி கல்விதுறையுடன் இணைந்து கட்டணமில்லா பயண அட்டையினை இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ - மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கி செல்ல அனைத்து மாநகர போக்குவரத்து கழக நடத்துநர் - ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe