Advertisment

‘வாகன ஓட்டிகள் கவனத்திற்கு’ - சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Attention driversTraffic change in Chennai

சென்னை கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (06.11.2024) முதல் ஒரு வாரத்திற்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது எனச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேம்பாலம் கட்டும்பணியினையொட்டிகணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியின் காரணமாக, போக்குவரத்து மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு, நாளை மறுநாள் (06.11.2024) முதல் ஒரு வாரத்திற்குச் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.

Advertisment

அதன்படி, தற்போதுள்ள ஒருவழி போக்குவரத்தும்,ஸ்டீபன்சன்சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்படும்.மேல்பட்டிபொன்னப்பன்தெருவில் இருந்துபுளியந்தோப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள்ஸ்டீபன்சன்சாலை வழியாகத் திருப்பி விடப்படும். மேலும் அவர்கள் ஏ.ஏ. சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் மேம்பாலம்,ஜமாலியாசாலை,குக்ஸ்சாலை சந்திப்பு,ஸ்டீபன்சன்சாலை, செங்கை சிவன் பாலம்,டாக்டர்அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாகப் புளியந்தோப்பை அடையலாம்.

Advertisment

கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை - காந்திரவுண்டானா-பேசின்பாலம் வியாசர்பாடி புதிய பாலம் -மார்க்கெட்- முத்து தெரு -மூர்த்திங்கர்தெரு - வலதுஎருகஞ்சேரிசாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம். எனவே இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

traffic Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe