/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/com-exam-art-2-our.jpg)
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களைநிரப்புவதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி (10.11.2023) அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கான எழுத்துத் தேர்வு வரும் 24 ஆம் தேதி (24.12.2023) கொளத்தூர் தொன் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, அண்ணா நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி, நந்தனம் அரசினர் கலைக் கல்லூரி, சேத்துப்பட்டு பச்சையப்பா கல்லூரி ஆகிய 6 மையங்களில் நடத்தப்படவுள்ளது.
இத்தேர்விற்கான அனுமதி நுழைவுச் சீட்டினை (Hall Ticket) நேற்று (18.12.2023) முதல் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் https://www.drbchn.In என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு [email protected] மின்னஞ்சல் முகவரியையும், 044-2461 6503 மற்றும் 044-2461 4289 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனச் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)