Attempting to his wife ; on the CCTV footage

நாகர்கோவிலில் மனைவியை அரிவாளால் வெட்ட முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அழிக்கால் கிராமத்தைச்சேர்ந்த ஜோஸ்லின் என்பவர் தனது கணவர் ஆண்டனியுடன் வசித்து வந்தார். இடையே பல்வேறு குற்றச்செயல்களுக்காகக்கைது செய்யப்பட்டு சிறையில் ஆண்டனி அடைக்கப்பட்டார்.

Advertisment

இதனை அடுத்து ஜோஸ்லின் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த ஆண்டனி ஜோஸ்லின் வேலைபார்க்கும் துணிக்கடைக்கு சென்று அவரை அரிவாளால் வெட்ட முயற்சித்தார்.

இதில் ஜோஸ்லின் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து ஜோஸ்லின் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஆண்டனியை கைது செய்தனர்.

Advertisment

தனது மனைவியையே அரிவாளால் வெட்ட முயன்ற நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.