Attempting to get off the train; Busted by a trapped person

திருச்சியில் ரயில் நிற்பதற்கு முன்பாகவே இறங்கமுயன்ற ஒருவர் ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான ஜெயச்சந்திரன் காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். தொடர்ந்து இன்று காலை திருச்சி ஜங்ஷனில் இறங்கியுள்ளார். அப்பொழுது ரயில் நிற்பதற்கு முன்பாகவே ஓட ஓட ஜெயசந்திரன் இறங்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அப்போது திடீரென கால் இடறி ஜெயச்சந்திரன் ரயிலுக்கும் தண்டபாளத்திற்கும் இடையே சிக்கிக் கொண்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் ரயில்வே போலீசார் உடனடியாக அவரை மீட்டனர். முதலுதவி சிகிச்சைக்காக ஜெயச்சந்திரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.