கோவையிலும் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி!   

Attempted robbery at SBI ATM center in Coimbatore

கோவையில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நிகழ்ந்துள்ளது.

கோவை மாவட்டம் செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடிக்க மர்ம நபர்முயற்சித்துள்ளார். ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும்போது ஹைதராபாத்தில் இருந்த வங்கி மேலாளரின் செல்ஃபோனுக்கு அலாரம் சென்ற நிலையில், வங்கி மேலாளர் உடனடியாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை சி.சி.டி.வி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை ஏடிஎம் டெபாசிட் மையத்தில் நடைபெற்ற கொள்ளைகள் தொடர்பாக நேற்று (23.06.2021) ஹரியானாவில் ஒருவர் கைது செய்யப்பட்டு, 3 பேரை தேடிவரும் நிலையில், தற்போது கோவையிலும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ATM CCTV footage kovai Robbery
இதையும் படியுங்கள்
Subscribe