Advertisment

ஐஓபி வங்கியில் கொள்ளை முயற்சி... சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

 Attempted robbery at IOB Bank ... Excitement over smashing CCTV camera

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பேருந்து நிலைய பகுதியில் உள்ளஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நேற்று (15.02.2021) நள்ளிரவு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வங்கியின் முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கிவிட்டு இந்தக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்ட வங்கிக்கு அருகில் இருந்த நான்கு கடைகளில் ஒரு லட்சம் ரூபாய் பணம்மற்றும் பொருட்கள்கொள்ளை போய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Advertisment

வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதால் வங்கியிலும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாஎன்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கொள்ளை முயற்சி நடைபெற்ற அந்த வங்கியில், இரவு நேர பாதுகாவலர் யாரும்நியமிக்கப்படாததால் இந்தக் கொள்ளை முயற்சி நடந்துள்ளது என அந்தப் பகுதி மக்களும், வணிகர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.கடந்த மூன்று நாட்களுக்கு முன்பேஅதே பகுதியில் பல கடைகளில் ஒரு லட்சத்திற்கும் மேலான பணம் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், அதற்கான சிசிடிவி காட்சிகளும் காவல்துறையினரிடம் கடைக்காரர்கள் ஒப்படைத்தனர். ஆனால்அது தொடர்பாக போலீசார்முறையாக விசாரணை செய்யவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நேற்று நள்ளிரவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

bank cctv Perambalur police Robbery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe