மலேசியாவிற்கு போதை மாத்திரை கடத்த முயன்ற வழக்கு... மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் சிறை...!

சென்னையிலிருந்து மலேசியாவிற்கு போதை மாத்திரை கடத்த முயன்ற வழக்கில், மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 attempted drug trafficking Case

கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போதை மாத்திரை கடத்த முயன்ற சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது அலி (51), பழவந்தாங்கலைச் சேர்ந்த இம்ரான்கான்(33), சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த நூருல் அமீன்(23) ஆகியோரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட முகமது அலி உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் 7 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

case court Drugs police
இதையும் படியுங்கள்
Subscribe