Attempted attack on RB Udayakumar; AIADMK administrator seriously injured

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் காரை நோக்கி அமமுகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

மதுரை உசிலம்பட்டி அருகே அத்திப்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. செயல்வீரர்கள் கூட்டம் முடிந்து ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் நோக்கி காரில் சென்றார். அப்பொழுது வழிமறித்த அமமுக நிர்வாகிகள் சிலர் டி.டி.வி.தினகரன் குறித்து ஆர்.பி.உதயகுமார் அவதூறு பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு அவரை தாக்க முயன்றனர்.

Advertisment

இதில் ஆர்.பி.உதயகுமாருடன் உடன் வந்தவர்களை தாக்கியதாக தகவல் வெளியானது. இதில் அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் படுகாயமடைந்த நிலையில் விஷ்ணு, அபினேஷ் உள்ளிட்ட சிலரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.