Advertisment

செயின் பறிக்க முயன்று தலை தெறிக்க ஓடிய இளைஞர்கள்

attempt to snatch the chain in broad daylight; The youths left the bike and ran because of the shouting

Advertisment

கடலூரில் பட்டப்பகலில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் செயின் பறிக்கமுயன்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் வடக்குத்துஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவர் தனது இரண்டு மகன்களுடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தார். இந்திரா நகர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது,அவருடைய ஸ்கூட்டியை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், திடீரென பாக்கியலட்சுமி கழுத்திலிருந்த செயினை பறிக்க முயன்றனர்.

உடனடியாக பாக்கியலட்சுமி மற்றும் அவரது மகன்களான சிறுவர்கள் கத்தி கூச்சலிட்டனர். ஆனாலும் விடாத அந்த இளைஞர்கள் பாக்கியலட்சுமி கழுத்தில் இருந்து சங்கிலியை இழுக்க, அவர் நிலை தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்த நிலையில், செயினை பறிக்கமுயன்ற அந்த இளைஞர்கள், அவர்களுடைய இருசக்கர வாகனத்தையும் அதே இடத்தில் விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe