Advertisment

ஊராட்சி செயலாளரை கொலை செய்ய முயற்சி - பதட்டத்தால் போலீஸ் குவிப்பு

கடலூர் மாவட்டம் வடலூர் அருகேயுள்ளது துராசா பாளையம் கிராமம். இந்த கிராமத்தின் தே.மு.தி.க. கட்சியின் ஊராட்சியின் செயலாளராக உள்ளவர் செந்தில்குமார். இவர் நேற்று இரவு வடலூரில் இருந்து அவரது ஊருக்கு சென்றுள்ளார். ஊருக்கு செல்லும் வழியில் சில மர்ம நபர்கள் அவரை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

Advertisment

murder attempt

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய செந்தில்குமாரை அவ்வழியே சென்றவர்கள் பார்த்துவிட்டு ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார் செந்தில்குமார். தேர்தல் முன்விரோதத்தினால் செந்தில்குமார் வெட்டப்பட்டாரா? வேறு ஏதேனும் முன் விரோத காரணமா? என வடலூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். வடலூர் பகுதியில் பதட்டமாக உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

attempt dmdk murder
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe