ADVERTISEMENT

‘அமைச்சர்கிட்டயே சொன்னாலும் ஒன்னும் செய்ய முடியாது’ குளத்தை ஆக்ரமிக்க முயற்சி! தடுத்த பொதுமக்கள்

05:04 PM Apr 01, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, நில அபகரிப்பு பிரிவு என்கிற பெயரில் காவல்துறையில் தனிபிரிவு ஏற்படுத்தினார். இந்தப் பிரிவின் கீழ் திமுக பிரமுகர்கள் மீது புகார் தந்தாலே அதனை முறையாக விசாரிக்காமல் கைது செய்யும் நடவடிக்கையும் இருந்துவந்தது.


கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் இடங்களை நிலங்களை அடித்து பிடுங்குவார்கள் என அதிமுக, பாஜக போன்றவை பிரச்சாரம் செய்தன. மக்களிடம் அவை எடுப்படவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக இனி அதுப்போன்ற புகார்கள் எந்த மாவட்டத்திலிருந்தும் வரக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில் திருவண்ணாமலை நகரில், குடியிருப்பு பகுதியில் உள்ள குளம் ஒன்றை மண் கொட்டி சிலர் மூடுகிறார்கள் என்கிற புகார் எழுந்துள்ளது.


இதுக்குறித்து அப்பகுதி மக்கள் நம்மிடம், எங்கள் கோபுரம் தெருவில் மலையடிவாரத்தில் ஒருகுளம் உள்ளது. இந்த குளத்தை மார்ச் 31ஆம் தேதி காலையிலேயே சிலர் ஜே.சி.பி கொண்டுவந்து அதன் கரைகளை உடைத்து மண்கொட்டி நிரவிக்கொண்டு இருந்தார்கள். இதுக்குறித்து நாங்கள் எங்கள் 7வது வார்டு கவுன்சிலர் திமுகவை சேர்ந்த செந்திலுக்கு தகவல் தெரிவித்தோம். அவர் வந்து ஜே.சி.பி டிரைவரிடம் விசாரித்தபோது சரியான பதில் சொல்லவில்லை. திமுகவை சேர்ந்த சிலர் வந்து அவரிடம் தகராறு செய்தாங்க. அமைச்சர்கிட்டயே சொன்னாலும் ஒன்னும் செய்ய முடியாதுன்னு சத்தம் போட்டதை தெருவில் இருந்த எல்லோரும் கேட்டோம். கவுன்சிலர் நகரமன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தார். சேர்மன் நிர்மலாவின் கணவரான திமுக ந.செ கார்த்திவேல்மாறன் இங்குவந்து குளத்தை பார்த்துவிட்டு, வேலையை நிறுத்தச்சொன்னார். அதன்பின்பே வேலை நிறுத்தப்பட்டது என்கிறார்கள். குளத்தின் தெற்கு பகுதி கரை முழுவதும் உடைத்து மண் நிரவியிருந்தார்கள்.


இதுக்குறித்து நம்மிடம் பேசிய திமுகவினர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள பொதுக்குளங்களை தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார். ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு குளத்தை பொறுப்பெடுத்து அந்த குளங்களை தூர்வாரி, சீர்செய்து, கருங்கல் கொண்டு சுற்றுசுவர் கட்டி தண்ணீர் மழைநீரை தேக்கிவைப்பதுபோல் செய்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த குளங்கள் மழையால் நிரம்பின. குறிப்பிட்ட இந்த குளத்தை 5 லட்ச ரூபாய் செலவில் தூர்வாரி, செப்பனிட்டு, கம்பி வேலி அமைத்தது திருவண்ணாமலை மாவட்ட திமுகவின் வர்த்தகர் அணி. அந்த குளத்தைதான் அமைச்சர் பெயரை சொல்லி தங்களது தனிப்பயன்பாட்டுக்காக நிரவியுள்ளார்கள். அந்தப்பகுதி மக்கள் எச்சரிக்கையாகி தகவல் சொல்லி வார்டு கவுன்சிலர், நகர செயலாளர் என விஷயத்தை கொண்டுச்சென்று தடுத்துள்ளனர் என்கிறார்கள்.


இதுக்குறித்து நகரசெயலாளர் கார்த்திவேல்மாறனை நாம் தொடர்புக்கொண்டு கேட்டபோது, ‘குளத்தில் ஜே.சி.பி உள்ளே விழுந்துடுச்சின்னு சொன்னாங்க, அதைப்பார்த்துட்டு வந்தேன். எங்க கட்சிக்காரங்க குளத்தை மூட முயற்சி செய்தாங்கன்னு சொல்றது தவறு’ என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT