Advertisment

விஷ ஊசி செலுத்தி கணவனை கொல்ல முயற்சி; மனைவிக்கு போலீசார் வலை

Attempt to husband by injecting poison; Police net for wife

குன்னத்தூர் அருகே கணவனை விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை விற்குமாறு அவரது மனைவி தேவி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு சுப்பிரமணியனும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதனையடுத்து தேவி ஊசி ஒன்றை அவருக்கு செலுத்தியுள்ளார். அதன் பிறகு மயக்கமடைந்த சுப்பிரமணியை உறவினர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுயநினைவை இழந்த சுப்பிரமணிக்கு செய்த மருத்துவ சோதனையில் அவரது இரத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் சுயநினைவை எட்டினார். இந்த நிலையில் மனைவி செலுத்திய ஊசி காரணமாக தனக்கு இப்படி ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்த சுப்பிரமணியன் அவர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் தலைமறைவாக உள்ள மனைவி தேவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisment

police incident thirupur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe