Attempt to give token ... Congress person

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பதுதொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும்என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Advertisment

நெல்லை மூலக்கரைப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் மயில்ராஜிடம் இருந்து 8,000 மற்றும் 90 டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.